×

சம்சாரம் இல்லாமல் வாழலாம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது: சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் ..!!

சென்னை: சம்சாரம் இல்லாமல் வாழலாம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ம் நாள் அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரம் தொடங்கி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

அந்தவகையில் சட்டப்பேரவையில் பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணி சம்சாரம் இல்லாமல் வாழலாம், ஆனால் மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது. தமிழ்நாட்டில் தற்போது மின் நுகர்வோர் எண்ணிக்கை அதிகரிக்க வருகிறது என்றும் கூறி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு சம்சாரம் இல்லாமல் வாழலாம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பதில் தெரிவித்தார். மேலும் பல்வேறு மின்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாடு இந்திய அளவிலே மரபு சாராத ஏறி சக்தியை உருவாக்குவதில் முன்னணியாக உள்ளது. புனல் மின்திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

The post சம்சாரம் இல்லாமல் வாழலாம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது: சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் ..!! appeared first on Dinakaran.

Tags : Minister Gold South ,Russia ,Chennai ,Minister ,Thangam Tennarasu ,Legislative Assembly ,Tamil Nadu Legislative Assembly ,Gold South Rasu ,Dinakaran ,
× RELATED ரஷ்யாவில் உயர்கல்வி பயில...